கோவை மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வை 35033 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 35033 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.

Update: 2022-05-03 15:25 GMT

கோவை

கோவை மாவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்கும்  பிளஸ்- 2 பொதுத்தேர்வை 35,033 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (வியாழக் கிழமை) தொடங்குகிறது. இதற்கான தேர்வு அட்டவணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. 

அந்த வகையில் கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 35,033 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இதற்காக 119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 

இதையொட்டி தேர்வு மைய வளாகங்கள் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. ஒரு வகுப்பறைக்கு 10 மேஜைகள் மட்டுமே போடப்பட்டு இருக்கும். 

எனவே ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். 

தேர்வு எழுத வரும் மாணவ- மாணவிகள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

போலீஸ் பாதுகாப்பு

பொதுத்தேர்வு எழுத வரும் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

 இது குறித்து தேர்வு துறை அதிகாரிகள் கூறியதாவது

பிளஸ்-2 மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 

இந்த தேர்வு மையங்களில் குடிநீர், தடையற்ற மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 

மேலும் தேர்வுக்கான வினாத்தாள் வைக்கப்பட்டு உள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பறக்கும் படை

தேர்வு எழுத வரும் மாணவ-மாணவிகள் வாட்ச், பெல்ட் அணிந்து வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

தேர்வு அறைக்கு வெளியே செருப்பு, ஷூ உள்ளிட்டவற்றை கழற்றி விட்டு உள்ளே செல்ல வேண்டும். மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்