பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-05-03 15:08 GMT
வடமதுரை:
வடமதுரை பால்கனிமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வி (வயது 42). இவர் அப்பகுதியில் உள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றார். அங்கு ஏற்கனவே அதே பகுதியை சேர்ந்த கார்த்திகா (27) என்பவர் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார்.
அப்போது 2 பேருக்கும் இடையே தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த கார்த்திகா தனது உறவினர்களுடன் சேர்ந்து செல்வியை தாக்கினார். இதுகுறித்து செல்வி வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் கார்த்திகா மற்றும் அவரது உறவினர்கள் மாரியம்மாள், குமார், சங்கீதா ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்