அய்யனாரப்பன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
பண்ருட்டி அருகே அய்யனாரப்பன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
பண்ருட்டி,
பண்ருட்டி அடுத்த எம். ஏரிப்பாளையத்தில் பொற்கலை, பூரணி சமேத அய்யனாரப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் காலை 8 மணிக்கு அய்யனார், மாரியம்மன், விநாயகர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் 3 மணிக்கு கிராம மக்கள் பொங்கல் வைத்து படையல் செய்தனர். தொடர்ந்து இரவில் பொற்கலை பூரணி சமேத அய்யனாரப்பன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவில் சாமி வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது.