ஓட்டப்பிடாரம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

ஓட்டப்பிடாரம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்து போனார்.

Update: 2022-05-03 14:30 GMT
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சக்கரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் கருப்பசாமி (25). தொழிலாளி. இவர் உட்பட 5 பேர் கீழமங்கலம் கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வீட்டு சுவரில் நேற்று வெள்ளை அடித்து கொண்டிருந்தனர். கருப்புசாமி மட்டும் இரும்பு ஏணியில் ஏறி வெள்ளை அடித்துக் கொண்டிருந்துள்ளார். வெள்ளை அடித்து முடிந்த பிறகு ஏணியை தூக்கி மற்றொரு இடத்திற்கு தூக்கியபோது எதிர்பாராவிதமாக மின்சார ஒயரில் உரசியுள்ளது. இதில் ஏணியில் பாய்ந்த மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட கருப்புசாமி படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு பசுவந்தனை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகச்சைக்குப்பின் மேல் சிகிச்சைக்காக ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்