தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
குளத்தூரில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எட்டயபுரம்:
குளத்தூர் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த முருகன் மகன் முத்துப்பாண்டி (வயது 50). தொழிலாளி. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி மாரியம்மாளிடம் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த முத்துப்பாண்டி வீட்டின் அருகே உள்ள ஆட்டுத் தொழுவத்தில் நைலான் கயிற்றால் தூக்கிட்டு தொங்கியுள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு குளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், முத்துப்பாண்டி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய குளத்தூர் போலீசார், பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.