ரம்ஜான் சிறப்பு தொழுகை
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை யொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
நோன்பு
இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ஒன்று ரமலான் நோன்பு இருப்பதாகும். இதன்படி புனித ரமலான் மாதத்தினையொட்டி கடந்த 30 நாட்களாக முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் நோன்பு இருந்து உண்ணாமல் பருகாமல் கடும் விரதத்தை கடைப்பிடித்து வந்தனர்.
முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர் ஆன் ஏக இறைவனால் அருளப்பட்ட நாள் என்பதால் 27-வது நோன்பு அன்று லைலத்துல் கத்ரு எனப்படும் புனித இரவை கொண்டாடி விடிய விடிய சிறப்பு தொழுகை நடத்தினர்.
இதனை தொடர்ந்து ரமலான் பண்டிகைக்காக பிறை தென் பட்டதை தொடர்ந்து தமிழக தலைமை ஹாஜி ரமலான் பண்டிகை அறிவிப்பை வெளியிட்டார். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் சிறப்பாக கொண்டாடினர்.
சிறப்பு தொழுகை
இதன்படி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை வெகு விமரிசையாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ராமநாதபுரத்தில் மதுரை ரோட்டில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த ஈதுகா மைதா னத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. நகரில் உள்ள பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் இந்த சிறப்பு தொழுகையில் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.
இதில் உலக நன்மைக்காகவும், மழைவேண்டியும், அமைதி நிலவவும், கொரோனா போன்ற பெருந்தொற்று பரவாமல் மக்களை காக்கவும், நிலத்தடி நீர் உயரவும், மன அமைதி வேண்டியும் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. சிறப்பு தொழுகையின் முடிவில் சிறியவர் முதல் பெரியவர் வரை ஒருவரையொருவர் கட்டித்தழுவி ரமலான் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
ஏழை வரி
நோன்பு பெருநாளை ஈகை திருநாளாக கொண்டாட வேண்டும் என இஸ்லாமிய மார்க்கத்தில் அறிவுறுத்தப்பட்டு உள்ளதால் தங்களது ஆண்டு வருமானத்தில் 2.5 சதவீதத் தினை கணக்கிட்டு ஏராளமான ஏழைகளுக்கு தான தர்மங்களை முஸ்லிம்கள் வழங்கினர். சிறப்பு தொழுகைக்கு முன்னதாக பித்ரா எனப்படும் ஏழை வரியை நலிந்த வர்களுக்கு வழங்கினர். இதனை ஏராளமானோர் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
இதேபோல, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மதரசா மற்றும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் ஏராள மான பெண்கள் திரண்டு சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, பெரியபட்டிணம், ஏர்வாடி, சாத்தான்குளம், அழகன்குளம், பனைக்குளம், சித்தார்கோட்டை, வாணி, புதவலசை, புதுமடம், ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி, நம்புதாளை உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் ராம்ஜான் பண்டிகையை யொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு தொழுகையின் முடிவில் உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த்தணை நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர். ரம்ஜான் பண்டிகையை யொட்டி ஒவ்வொருவர் வீட்டிலும் பிரியாணி கறிவிருந்து தயார் செய்யப்பட்டு உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் வழங்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று பரவல் காரண மாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அந்தந்த பகுதி பள்ளிவாசல்களில் சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்தி கொண்டாடிய மக்கள் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் ரம்ஜான் பண்டிகையை கட்டுப்பாடின்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.