வருங்கால வைப்பு நிதி குறித்த குறை தீர்க்கும் கூட்டம்-10-ந் தேதி நடக்கிறது

வருங்கால வைப்பு நிதி குறித்த குறை தீர்க்கும் கூட்டம் 10-ந் தேதி நடக்கிறது.

Update: 2022-05-02 23:29 GMT
சேலம்:
சேலம் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் விஜய்ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் தளவாய்பட்டி இரும்பாலை சாலையில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் வருகிற 10-ந்தேதி குறை தீர்க்கும் கூட்டம் ஆணையாளர் சிவகுமார் தலைமையில் நடக்கிறது. அதன்படி சந்தாதாரர்களுக்கு காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. தொழில் அதிபர்களுக்கு மதியம் 3 முதல் மாலை 4 மணி வரையிலும், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மாலை 4 முதல் மாலை 5 மணி நடைபெறுகிறது. எனவே குறைகள் தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் வருகிற 9-ந்தேதிக்குள் தெரிவிக்கவும். அதே போன்று கிருஷ்ணகிரி அலுவலகத்தில் அமலாக்க அதிகாரி சாத்தகிராமன் தலைமையில் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது. 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்