கால் டாக்சி டிரைவர் மர்ம சாவு

கால் டாக்சி டிரைவர் மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-05-02 23:22 GMT
ஓமலூர்:
ஓமலூர் கண்ணனூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39). கால் டாக்சி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருைடய மனைவி சத்யா. சுரேசிற்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனிடையே ஓமலூரில் ஒரு சினிமா தியேட்டர் அருகில் சுரேஷ், மயங்கி கிடப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து சத்யா மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு சென்ற அவரை மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சுரேஷ் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்