தீக்குளித்து பெண் தற்கொலை

தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-02 23:07 GMT
கொண்டலாம்பட்டி:
கொண்டலாம்பட்டி அருகே உள்ள வேம்படிதாளம் பகுதி சேனைப்பாளையத்தை சேர்ந்தவர் அர்த்தநாரி. இவருடைய மனைவி தங்கம்மாள் (வயது 57). இவர் நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் வீட்டில் இருந்த மண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் தங்கம்மாள் தீயில் கருகி தனது வீட்டு வாசலில் துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்