காட்டுமன்னார்கோவிலில் ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காட்டுமன்னார்கோவிலில் ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலம் ஊராட்சியில் நேற்று முன்தினம் நடந்த கிராமசபை கூட்டத்தின் போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரனை ஊராட்சி மன்ற துணை தலைவர் சரண்யா செருப்பால் அடித்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சண்முகசிகாமணி தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ஆனந்தன், துணைத்தலைவர் கொளஞ்சி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் அரசு அதிகாரியை தாக்கிய பெண் ஊராட்சி மன்ற துணை தலைவர் சரண்யாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும், பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் கோஷங்களை எழுப்பினர். முடிவில் மாவட்ட இணைச்செயலாளர் தாமரை நன்றி கூறினார்.