போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாவு
மணப்பாறை அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதிய விபத்தில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலியானார்.
மணப்பாறை, மே.3
மணப்பாறை அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதிய விபத்தில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலியானார்.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள எசனை கோரை பகுதியை சேர்ந்தவர் மந்திரிகுமார் (வயது 53). இவர் வையம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு விஜயராணி என்ற மனைவியும், மோனிகா(19) என்ற மகளும், ஹரிகரன் (17) என்ற மகனும் உள்ளனர். மோனிகா சமயபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாமாண்டும், ஹரிகரன் பிளஸ்-2வும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 29-ந்் தேதி எசனைகோரை கிராமத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வையம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தார். திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மரவனூர் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த மொபட் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மந்திரி குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சிகிச்சை பலன் இன்றி சாவு
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மந்திரி குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மந்திரி குமார் உடலுக்கு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், அதிகாரிகள் மற்றும் போலீசார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.