மகாமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா: பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்

தவிட்டுப்பாளையம் மகாமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2022-05-02 18:37 GMT
கரூர்
நொய்யல், 
சித்திரை திருவிழா
கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையத்தில் உள்ள மகாமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 24-ந்தேதி பூச்சூடுதல் மற்றும் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனத்தில் திருவீதிஉலா வந்தார். நேற்று மாலை திரளான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனிதநீராடி விட்டு ஊர்வலாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் திரளான ஆண் பக்தர்கள் அக்னிகுண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். 
பெண்கள் பூ வாரிப் (நெருப்பு) போட்டுக் கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு பால், பழம், விபூதி உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. 
திருவீதி உலா
தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி வழியாக திருவீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கிடா வெட்டு பூைஜயும், மாலையில் பொங்கல் வைத்தல், மா விளக்கு ஊர்வலம், விளக்கு பூஜையும் நடக்கிறது. இரவு வாண வேடிக்கை நடைபெறுகிறது. 
நாளை (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சியும், பகல் 11 மணிக்கு மேல் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்