தோகைமலை,
தோகைமலை அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜெயமணி தலைமை தாங்கினார். தோகைமலை ஊராட்சி மன்ற தலைவர் தனமாலினி கந்தசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு புதிய தலைவர், துணைத்தலைவர், நிர்வாகிகள், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் கருப்பண்ணன், தோகைமலை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.