சைக்கிள் மீது கார் மோதி முதியவர் பலி

லாலாபேட்டை அருகே சைக்கிள் மீது கார் மோதி முதியவர் பலியானார்.

Update: 2022-05-02 18:22 GMT
கரூர்
கிருஷ்ணராயபுரம்,
முதியவர் பலி
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள நந்தன்கோட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 62). இவர் தனது சைக்கிளில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சோமு (59) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக ஆறுமுகம் சைக்கிள் மீது மோதியது. 
இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆறுமுகத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்