மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் அடைந்தவர் சாவு

மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் அடைந்தவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-05-02 18:07 GMT
கரூர்
தரகம்பட்டி,
கடவூர் வட்டம், மாவத்தூர் கிராமம் மசாலூர் செங்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 46). இந்தநிலையில் சம்பவத்தன்று தரகம்பட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக சண்முகம் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காமாட்சிபுரத்தை சேர்ந்த ஸ்டாலின் (23) என்பவர் ஓட்டி வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், சண்முகம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சண்முகம் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சண்முகம் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்