திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை

Update: 2022-05-02 17:59 GMT
எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே கட்டுகுடிபட்டியில் உள்ள செல்வ விநாயகர், மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது. விழாவில் பெண்கள் கோவிலில் திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். இரவில் ஆரத்தி குடம், பால்குடம், எடுத்து அதனை தொடர்ந்து பூத்தட்டு ஏந்தி வந்து மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். அதனை தொடர்ந்து செல்வ விநாயகர், மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர். நேற்று காலை பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்