சோளிங்கர்
ராணிபேட்டை மாவட்டம் சோளிங்கரில் செயல்படக்கூடிய டி.வி.எஸ். நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தேசியஎன்ஜினீயரிங் பணியாளர் சங்கத்தின் சார்பில் மே தினத்தை முன்னிட்டு சங்க தலைவர் சீனிவாசன் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. சோளிங்கர் காந்தி சிலையில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் தனியார் திருமண மண்டபம் வரை நடந்தது. அங்கு முப்பெரும் விழா நடந்தது.
இதில் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது 10 ஆண்டுகளாக பணியாற்றும் தொழிலாளர்களை நிரந்தரம்செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து டி.வி.எஸ். நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் பேசினர்.
அனைவரும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டனர். சங்க உறுப்பினர்கள், பிரேக்ஸ் இந்தியா உயர் அதிகாரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.