உப்பள்ளி கலவர வழக்கில் கைதான 154 பேருக்கு மே 13-ந் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

பழைய உப்பள்ளி கலவரம் தொடர்பாக கைதான 154 பேருக்கும் மே 13-ந் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-05-02 16:43 GMT


உப்பள்ளி:

காவி கொடி

  தார்வார் மாவட்டம் பழைய உப்பள்ளியில் உள்ள மசூதியில் காவி கொடியை பறக்க விட்டு அதை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மற்றும் வாட்ஸ் அப் குழுக்களுக்கு வாலிபர் ஒருவர் அனுப்பியிருந்தார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
   இதுதொடர்பாக முஸ்லிம் சமூதாயத்தினர் பழைய உப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் கல்லூரி மாணவர் ஒருவரை கைது செய்தனர்.

போலீ நிலையம் சூறை

   இந்நிலையில் கடந்த மாதம் (ஏப்ரல்) 16-ந் தேதி முஸ்லிம் சமுதாயத்தினர் பழைய உப்பள்ளி போலீஸ் நிலையத்ைத முற்றுகையிட்டு ேபாராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி கூறினர். இதை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் போலீஸ் நிலையம், போலீஸ் வாகனம், மற்றும் அனுமன் கோவில் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் வாகனங்களுக்கும் தீ வைத்து எரித்தனர்.

இதை பார்த்த போலீசார் நிலமையை கட்டுக்குள் கொண்டுவர தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அனைவரையும் கலைத்தனர். இந்த கலவரத்தில் போலீஸ் வாகனம் உள்பட ரூ.12 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது. இது குறித்து பழைய உப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கிடைத்த தகவலை வைத்து வாசீம் பட்தான், நசீர், ஆரிப் உள்பட 154 பேரை கைது செய்தனர்.

நீதிமன்ற காவல்

   நேற்று இவர்களில் சிலரின் போலீஸ் காவல் நிறைவடைந்தது. மேலும் சிலர் ஜாமீன் கோரி உப்பள்ளி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது நீதிபதி ஒருவருக்கும் ஜாமீன் கிடையாது என்று கூறிவிட்டார். மேலும் 154 பேருக்கும் மே 13-ந் தேதி வெள்ளிக்கிழமை வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 103 பேர் கலபுரகி சிறைக்கும், 17 பேர் பல்லாரி, 10 பேர் மைசூரு மற்றும் சிலர் உப்பள்ளி-தார்வார் சிறை
யிலும் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்