கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. அப்போது ஓசூர் அருகே ஈச்சங்கூர் ஊராட்சிக்குட்பட்ட சொக்கநாதபுரம் கிராமத்தில் விவசாயிகள் அமைத்திருந்த பட்டுப்புழு வளர்ப்பு குடில்கள், பசுமைக்குடில்கள் சேதமடைந்தன. இதேபோன்று போச்சம்பள்ளி, ராயக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இந்தநிலையில் நேற்று மாலை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றது.