சவக்குழிக்குள் படுத்து விவசாயி நூதன போராட்டம்
செங்கத்தில் சவக்குழிக்குள் படுத்து விவசாயி நூதன போராட்டம்
செங்கம்
செங்கத்தில் மாதம் தோறும் நடைபெறும் விவசாய குறைதீர்வு கூட்டத்திற்கு வருகை தரும் அதிகாரிகள் விவசாயிகளிடம் குறைகளை முழுமையாக கேட்டு அதற்கு முறையாக பதில் அளிப்பதில்லை.
எனவே விவசாயிகளின் குறைகளை கலெக்டர் நேரில் விசாரணை செய்ய வேண்டும் என கோரி செங்கம் பகுதியில் ராமஜெயம் என்ற விவசாயி தனக்குத்தானே சவக்குழி வெட்டி சவக்குழிக்குள் படுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர் சவக்குழிக்குள் இருந்து எழுந்து வெளியில் வந்தார்.