மின் நிறுத்தம் செய்த பிறகே தேரோட்டம் நடத்த வேண்டும்
மின் நிறுத்தம் செய்த பிறகே தேரோட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வலியுறுத்தி உள்ளார்.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளியை அடுத்த கேத்தாண்டப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது. தேரோட்டத்தின்போது முக்கிய வீதிகளில் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைப்பார்கள்.
தேரோட்டம் நடைபெற இருப்பதை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், தேரை பார்வையிட்டு பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மின்சாரத் துறையின் அறிவுரையின்படி தேரோட்டம் நடத்தப்பட வேண்டும். தேரோட்டத்துக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும், மின்சாரம் நிறுத்திய பின்புதான் தேரோட்டம் நடத்த வேண்டும் எனவும், பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம், தனிபிரிவு ஏட்டு செந்தில் மற்றும் போலீசார், முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.