கொரோனாவினால் பெற்றோரை இழந்த சிறுமிக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி

திருப்பத்தூரில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், கொரோனாவினால் பெற்றோரை இழந்த சிறுமிக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதியை கலெக்டர் வழங்கினார்.

Update: 2022-05-02 13:29 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், கொரோனாவினால் பெற்றோரை இழந்த சிறுமிக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதியை கலெக்டர் வழங்கினார்.

குறைதீர்வு கூட்டம் 

திருப்பத்தூ மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

கூட்டத்தில் பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 295 மனுக்களை கலெக்டர் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

ரூ.5 லட்சம் நிதி

மேலும் கொரோனா தொற்றின் காரணமாக தாய், தந்தையை இழந்த சிறுமிக்கு முதல்-அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வைப்பு நிதிக்கான பத்திரத்தை சிறுமி ரூபினியிடம் கலெக்டர் வழங்கினார்.

கந்திலி ஒன்றிய அ.தி.மு.க. அவைத் தலைவர் சாமிநாதன் அளித்துள்ள மனுவில், மட்றப்பள்ளி வாரச்சந்தைக்கான ஏலத்தை ரத்து செய்வதாக இருந்தால் அதை ஏலத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் தெரியப்படுத்திவிட்டு, அதிக பட்சமாக யார் ஏலத்தொகையை செலுத்துகிறார்களோ அவர்களுக்கு ஏலம் விட வேண்டும். வாரச்சந்தை ஏலத்தை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என மநு கொடுத்தார். 
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, மாவட்ட ஊரக வளாச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்