காயல்பட்டினம் கடற்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
காயல்பட்டினம் கடற்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் முஸ்லிம்கள் திரளாக கலந்துகொண்டு தொழுகை நடத்தினர்.
ஆறுமுகநேரி:
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு காயல்பட்டினம் கடற்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை அல் ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவ இணையத்தின் சார்பில் நடைபெற்றது.
தொழுகை காலை 7.30 மணியளவில் நடைபெற்றது.
தொழுகையை பள்ளிவாசல் இமாம் நைனா முகமது நடத்தினார். தொடர்ந்து குத்பா பேருரையை பள்ளிவாசலின் கத்தீபு அப்துல் மஜீத் மஹழரி நடத்தினார்.
இதில் பள்ளிவாசல் தலைவர் அபுல்ஹஸன் கலாமி, செயலாளர் துளிர் முகமது உமர், பள்ளிவாசல் நிர்வாகிகள் நவாஸ் அகமது, அமானுல்லா, செய்யது முகமது, எல்.கே. லெப்பை தம்பி, உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
இந்த தொழுகையின் முடிவில் ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதற்காக உண்டியல் ஏந்தி சென்றவர்களிடம் முஸ்லிம்கள் சார்பில் ரூ.2 லட்சத்து 22 ஆயிரம் மற்றும் ஒரு வெள்ளிக்கொலுசு வழங்கப்பட்டது.