நிலத்தகராறில் சாதி பெயரை சொல்லி திட்டி தாக்குதல்; 3 பேர் மீது வழக்கு

நிலத்தகராறில் சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-05-01 23:55 GMT
கொள்ளிடம் டோல்கேட்:
முசிறி அருகே உள்ள மணபாளையம் பகுதியை சேர்ந்தவர் கலைவாணன்(வயது 40). இவர் அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவரின் நிலத்தை வாங்குவதற்காக, அவரிடம் ரூ.1 லட்சம் முன்பணம் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த நிலத்தில் உள்ள முட்புதர்களை அகற்றும் பணியில் கலைவாணன் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த அர்ஜுனனின் உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த காந்தி என்பவரின் மகன்கள் முத்துக்கண்ணு, சுப்பிரமணி, கண்ணன் ஆகிய 3 பேரும், இந்த நிலம் கூட்டுப்பட்டாவில் உள்ளதால், எப்படி நீ வாங்கினாய்? என்று கேட்டு கலைவாணனை சாதி பெயரை சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கலைவாணன் வாத்தலை போலீசில் அளித்த புகாரின்பேரில் முத்துக்கண்ணு, சுப்பிரமணி, கண்ணன் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் அம்மையப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்