சோளப்பயிருக்கு தீ வைத்த பெண் உள்பட 2 பேர் கைது

சோளப்பயிருக்கு தீ வைத்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-01 22:26 GMT
சேலம்:
சேலம் வீராணம் அருகே உள்ள அல்லிகுட்டை பகுதியை சேர்ந்தவர் லட்சுமி தேவி. இவர் அந்த பகுதியில் உள்ள நிலத்தில் சோளம் பயிரிட்டு உள்ளார். இந்த சோளப்பயிரை அதே பகுதியை சேர்ந்த பரசுராமன் (வயது 40), அவரது உறவினர் தனம் (58) ஆகியோர் தீவைத்து எரித்ததாக லட்சுமிதேவி வீராணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்