மதுவிற்ற வாலிபர் கைது

தெங்கம்புதூரில் மதுவிற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-01 21:47 GMT
மேலகிருஷ்ணன்புதூர், 
சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷாஜெபகர் தலைமையிலான போலீசார் தெங்கம்புதூர் குளத்தின் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும் வகையில் நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், புத்தளம் அருகே உள்ள பணிக்கன்குடியிருப்பை சேர்ந்த சரவணன் (வயது 35) என்பதும், அந்த பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 17 மது பாட்டில்கள், ரூ.600 ஆகியவற்றை பறிமுதல் செய்து சரவணனை போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்