ஒன்றிய அலுவலகத்துக்கு இடம் தேர்வு செய்யும் பணி

உளுந்தூர்பேட்டை ஒன்றிய அலுவலகத்துக்கு இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.

Update: 2022-05-01 20:48 GMT
உளுந்தூர்பேட்டை

பழமையான உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அலுவலகம் கட்ட வேண்டும் என சட்டப் பேரவையில் உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. மணிக்கண்ணன் கோரிக்கை வைத்தார். இதைத் தொடர்ந்து புதிய அலுவலகம் கட்டுவதற்கு தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

 இதைத் தொடர்ந்து தற்போதுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலேயே புதிய அலுவலகம் கட்டுவதற்கான இடத்தை தேர்வுசெய்யும் பணி நடைபெற்றது. இதை ஒன்றியக்குழு தலைவர் ராஜவேல் ஆய்வு செய்தார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், சீனிவாசன், பொறியாளர் வேல்முருகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்