ரூ.1 கோடியில் புதிய மேம்பாலம்

உளுந்தூர்பேட்டை அருகே ரூ.1 கோடியில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.

Update: 2022-05-01 20:44 GMT
உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே அங்கனூர் - எஸ்.மலையனூர் கிராமங்களுக்கு இடையே செல்லும் ஓடையின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை அகற்றி விட்டு புதியதாக ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இதற்கு உளுந்தூர்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் ராஜவேல் தலைமை தாங்கினார். 

நகராட்சி துணைத் தலைவர் வைத்தியநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், சீனிவாசன், மாவட்ட கவுன்சிலர் பிரியா பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான மணிக்கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மேம்பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இதில் பொறியாளர் வேல்முருகன் மற்றும் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்