தச்சு தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும்

தச்சு தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்

Update: 2022-05-01 20:26 GMT
அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினத்தில் பாரம்பரிய தச்சு தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் ஆனந்தராஜ் தலைமையில்  நடைபெற்றது. மோகன்குமார் முன்னிலை வகித்தார்.  தஞ்சை மாவட்ட தலைவர் சரவணன் வரவேற்றார். கூட்டத்தில், தச்சு தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். பேரிடர் காலங்களில் தச்சு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தச்சு தொழிலாளர்களின் குழந்தைகளின் மேற்படிப்புக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தச்சு தொழில் மேன்மை அடைய மாவட்டந்தோறும் தச்சுத் தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நகராட்சி தலைவர் தாஹீரம்மாள் அப்துல் கரீம், துணைத்தலைவர் ராமகுணசேகரன், அ.தி.மு.க. நகர செயலாளர் பிச்சை மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட  செயலாளர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்