அரசு வேலை கிடைக்க நடவடிக்கை

படித்த இளைஞர்கள் அனைவருக்கும் அரசு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

Update: 2022-05-01 20:13 GMT
சாத்தூர், 
சாத்தூர் யூனியனுக்கு உட்பட்ட 46 கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. என்.சுப்பையாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், சாத்தூர் ஊராட்சிமன்ற சேர்மன் நிர்மலா கடற்கரை ராஜ், மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி, கோட்டாட்சியர் புஷ்பா, வட்டாட்சியர் சீதாலட்சுமி, தனி வட்டாட்சியர் வெங்கடேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெள்ளைச்சாமி, ரவி, பஞ்சாயத்து தலைவர் வெங்கட்ராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
கூட்டத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதாவது:- படித்த இளைஞர்கள் அனைவருக்கும் அரசு வேலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வரும் காலங்களில் 100 நாள் வேலைத்திட்டத்தில் நாட்களும், ஊதியமும் உயர்த்தி தரப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார். 
இதில் துணை சுகாதார அலுவலர் ஸ்ரீஹரி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கடற்கரைராஜ், முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  உப்பத்தூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. முள்ளிசெவல் கிராமத்தில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு வீடு பராமரிப்பு தொகையாக 50 ஆயிரம் வீதம் 72 பயனாளிகளுக்கு அமைச்சர் உதவித்தொகை வழங்கினார்.

மேலும் செய்திகள்