மணல் திருடிய வழக்கில் தேடப்பட்டவர் கைது
மணல் திருடிய வழக்கில் தேடப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.
தா.பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராம நிர்வாக அலுவலர் அய்யப்பன் கடந்த 9.3.2021 அன்று தனது உதவியாளருடன் கோடாலிகருப்பூர் கொள்ளிடம் ஆற்றங்கரையில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தார். அப்போது கோடாலிகருப்பூர் தெற்கு தெருவைச் சேர்ந்த மாசிலாமணி மகன் துரை(வயது 58) தனது மொபட்டில் 3 மூட்டைகள் மணல் திருடி வந்தது தெரியவந்தது. கிராம நிர்வாக அலுவலரை கண்டவுடன் மொபட்டை அப்படியே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அய்யப்பன் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய துறையை தேடி வந்தார். இந்நிலையில் நேற்று துரையை கைது செய்த தா.பழூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.