இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் பயணம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் பயணம் சென்றனர்.
குளித்தலை,
ஒன்றிய, மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். இளைஞர்களின் உழைப்பை சுரண்டும் தற்காலிக, ஒப்பந்த, அவுட் சோர்சிங், திட்ட அடிப்படையில் நியமனத்தை தவிர்க்க வேண்டும். பணி நியமனத்தை நிரந்தர அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சென்னை, கன்னியாகுமரி, கோவை, புதுச்சேரி ஆகிய 4 பகுதிகளில் இருந்து திருச்சி நோக்கி சைக்கிள் பயணம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கோவையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற சைக்கிள் பயண குழுவினருக்கு குளித்தலை காந்தி சிலை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு சைக்கிள் பயணத்தின் நோக்கம் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. பின்னர் சைக்கிள் பயண குழுவினர் தங்களுடைய பயணத்தை தொடங்கி திருச்சி நோக்கி சென்றனர்.