குடிநீர் இணைப்பில் பித்தளை திருகுகள் திருட்டு
குடிநீர் இணைப்பில் பித்தளை திருகுகள் திருட்டு நடந்துள்ளது.
நச்சலூர்,
குளித்தலை ஒன்றியம் இனுங்கூர் ஊராட்சியில் பிரதம மந்திரி ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தத் திட்டத்தின் மூலமாக இனுங்கூர், மேல சுக்காம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட பித்தளை திருகு (டேப்) கடந்த சில நாட்களாகவே இரவில் மர்மநபர்களால் திருடப்பட்டு வருகின்றது. நேற்று முன்தினம் இரவு மேல சுக்காம்பட்டியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட பித்தளை திருகுகளை மர்ம நபர்களால் திருடி சென்றுள்ளனர். கடந்த சில நாட்களாக சுமார் 100-க்கும் மேற்பட்ட பித்தளை திருகுகள் திருடப்பட்டுள்ளது. எனவே மர்மநபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.