பள்ளிபாளையம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை

பள்ளிபாளையம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை

Update: 2022-05-01 19:02 GMT
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் பகுதியில் நேற்று காலை முதல் வெயில் அடித்தது. இதையடுத்து மாலை 6.30 மணி அளவில் திடீரென கருமேகங்கள் திரண்டன. பின்னர் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பஸ் நிலைய சாலை கடைகளில் உள்ள மேற்கூரைகள், கடையின் முன்னால் வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகள் காற்றில் பறந்தன. மேலும் பலத்த காற்றால் சாலையில் நடந்து சென்றவர்களின் கண்களில் தூசி விழுந்து அவதிப்பட்டனர். இந்த மழையால் வெப்பம் நீங்கி குளிர்ச்சி நிலவியது.

மேலும் செய்திகள்