இண்டூர் அருகே பாம்பு கடித்து விவசாயி சாவு
இண்டூர் அருகே பாம்பு கடித்து விவசாயி இறந்தார்.
பாப்பாரப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள பண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 65). விவசாயி. சம்பவத்தன்று இவர் வயல் ஓரமாக நடந்்து சென்றபோது பாம்பு கடித்தது. அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து இண்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.