குளித்தலை,
குளித்தலை அருகே உள்ள கோட்டமேடு மற்றும் கருங்கலாப்பள்ளி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் கோட்டமேடு பகுதிக்கு சென்ற போலீசார் தனது வீட்டின் பின்புறம் வைத்து மது விற்ற சிவானந்தம் (வயது 55) என்பவரையும், கருங்கலாப்பள்ளி பகுதியில் தனது வீட்டின் பின்புறம் வைத்து மது விற்ற முத்துலட்சுமி (41) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மொத்தம் 16 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.