கரூர் மாவட்டத்தில் பலத்த மழை

கரூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.

Update: 2022-05-01 18:50 GMT
கரூர்
கரூர், 
கரூரில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கரூரில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் மதிய வேளையில் வெளியில் வரமுடியாமல் அவதியடைந்தனர். இதேபோல் நேற்றும் கரூரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மாலை சுமார் 5.15 மணியளவில் திடீரென மேகங்கள் திரண்டு மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30 நிமிடங்கள் வரை பெய்தது. இதனால் கரூர் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
நொய்யல் மரவாபாளையம், சேமங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் சாலையோர வியாபாாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் தொடர்ந்து அவதிப்பட்டனர். அதேபோல் இருசக்கர வாகனங்களில் வெளியூர்களுக்கு சென்று திரும்பியவர்கள், வெளியூர்களுக்கு செல்பவர்கள் அவதி அடைந்தனர். 
வேலாயுதம்பாளையம், கூலக்கவுடனூர், கந்தம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலையில் கனமழை பெய்தது. இதனால் சாலைகள் ஆறுபோல் ஓடியது. 

மேலும் செய்திகள்