விஷம்குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு

விஷம் குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-05-01 18:44 GMT
கீரனூர்,
குன்றாண்டார்கோவிலை அடுத்துள்ள வைத்திகோவில் கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா (60). இவரது மகள் காந்திமதி அம்மை நோயால் இறந்ததாலும், மகனுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை என்பதால் மனவேதனையில் இருந்தவர் கடந்த 25-ந் தேதி விஷம் குடித்தார். இதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்லையா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உடையாளிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சுமையா பானு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்