கிராமப்புற வளர்ச்சியை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்
கிராமப்புற வளர்ச்சியை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே மே தினத்தை முன்னிட்டு சுந்தரநாச்சியார்புரம், மேலப்பாட்டகரிசல்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். அப்போது தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
கிராமப்புற வளர்ச்சியை கருத்தில் கொண்டு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். சுந்தரநாச்சியார்புரம் ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து குளியல் தொட்டி மற்றும் தெருக்களில் பேவர் பிளாக் தளம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் துணை சேர்மன் துரைகற்பகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், உறுப்பினர்கள், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, ஒன்றிய பொருளாளர் காந்தி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மாரிமுத்து, மகளிரணி அமைப்பாளர் ஜெயந்தி, கிளை செயலாளர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.