வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு

வேதாரண்யம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-05-01 18:33 GMT
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மீனவர்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்தவர் சுந்தர்ராமன்(வயது42).மீனவர். இவருடைய மகளுக்கு உடல் நிலை சரியில்லாததால் அவர் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வருகிறார். 
இதனால் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் தங்கியிருந்து மகளை கவனித்து வருகின்றனர். சுந்தர்ராமன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். 
15 பவுன் நகைகள் திருட்டு
 இந்த நிலையில் சம்பவத்தன்று சுந்தர்ராமன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். மறுநாள் அவர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே  சென்று பார்த்த போது  ஒரு பையில் வைத்திருந்த 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. 
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து அவர் வேதாரண்யம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தேவபாலன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்