விஷம் குடித்து மூதாட்டி சாவு

ஆற்காடு அருகே விஷம் குடித்து மூதாட்டி இறந்தார்.

Update: 2022-05-01 18:15 GMT
ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த ஆயிலம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணம்மாள் (வயது 85). வயது முதிர்வு காரணமாக உடல் நலம்பாதிக்கப்பட்டு மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மாத்திரை எது, மருந்து எது எனத் தெரியாமல் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த இவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை கண்ணம்மாள் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்