கண்மாய் பகுதியில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
கண்மாய் பகுதியில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது
சிங்கம்புணரி,
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா ஏரியூர் கிராமத்தில் உள்ள பொட்டகுண்டு கண்மாயில் முதுமக்கள் தாழி உள்ளதாக ஏரியூர் உலகினிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த, ஆறுமுகம் பிள்ளை, சீதை அம்மாள் கலைக் கல்லூரியில் பயிலும் மாணவி ஐஸ்வர்யா என்பவர் கொடுத்த தகவலில் அடிப்படையில் திருப்பத்தூர் தனியார் கலைக் கல்லூரி வரலாற்று பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அடங்கிய குழுவினர் நேற்று காலை முதல் ஆய்வு செய்தனர். அப்போது பெரிய முதுமக்கள் தாழி ஒன்றும், 10-க்கும் மேற்பட்ட தாழிகள் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து சிங்கம்புணரி வட்டாட்சியர் கயல் செல்விக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது எஸ்.எஸ். கோட்டை வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உடன் இருந்தனர். மேலும் இது தொடர்பாக தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவித்து ஆய்வு செய்யும் பட்சத்தில் மேலும் பல வரலாற்று சான்றுகள் கண்டறியப்படலாம் என பேராசிரியர்கள் தெரிவித்தனர்.