திருவெண்ணெய்நல்லூர் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

திருவெண்ணெய்நல்லூர் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

Update: 2022-05-01 17:54 GMT

திருவெண்ணெய்நல்லூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி. மழவராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரராஜூலு. விவசாயி. இவரது மனைவி சசிகலா (வயது 62). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

 அப்போது மர்ம நபர் கதவை உடைக்கும் சத்தம் கேட்டு, கணவன், மனைவி இருவரும் எழுந்து, யார் என்று பார்த்தனர்.  உடன், மர்ம  நபர் சுந்தரராஜூலுவை கீழே தள்ளிவிட்டுவிட்டு, சசிகலா கழுத்தில் அணிந்திருந்த 7 ½ பவன் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். 

இதுகுறித்த புகாரின் பேரில்  திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தாமரைசெல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்