வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அடுத்த மதுரப்பாக்கத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 32). தொழிலாளி. வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் மனமுடைந்த அவர், நேற்று காலை அதே கிராமத்தில் உள்ள திருமலை என்பவரின் அரிசி கடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.