சமையல் அறையில் புகுந்த நல்ல பாம்பு

சமையல் அறையில் புகுந்த நல்ல பாம்பை இரவு முழுவதும் பூட்டி வைத்து விட்டு மற்றொரு அறையில் தூங்கினர்.

Update: 2022-05-01 17:23 GMT
ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி கருணாநிதி தெருவில் வசித்து வருபவர் திருப்பதி. இவரது வீட்டில்  இரவு திடீரென 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்து சமையல் அறைக்குள் சென்றுவிட்டது. இதனை பார்த்த திருப்பதி இரவு நேரம் என்பதால் இது குறித்து யாருக்கும் தெரிவிக்காமல் சமையல் அறையின் கதவை பூட்டி வைத்து விட்டு, மற்றொரு அறையில் கதவை பூட்டிக்கொண்டு தூங்கினர். 

 காலையில் திருப்பதி குடும்பத்தினர் தூங்கி எழுந்து  நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கும், அப்பகுதி பொதுமக்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய அலுவலர் கலைமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று கியாஸ் சிலிண்டரை சுற்றி இருந்த நல்ல பாம்பை, பாம்பு பிடிக்கும் கருவி மூலம் பிடித்து அருகில் உள்ள காட்டில் விட்டனர்.

மேலும் செய்திகள்