தபால் துறை பெயரில் வரும் குறுந்தகவல்களை நம்ப வேண்டாம்

தபால் துறை பெயரில் வரும் குறுந்தகவல்களை நம்ப வேண்டாம் என்று கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-01 17:18 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் மு.மாதேஸ்வரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அண்மையில் சமூக வலைதளங்களில் தபால் துறை அனுப்புவது போன்ற தகவல் செல்போனில் பலருக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. அதில், தபால் துறை வாயிலாக பரிசுப் பொருள்கள் வழங்கப்படுவதாகவும், போட்டிகள் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக குறுஞ்செய்தியுடன் லிங்க் அனுப்பி பயன்படுத்தும்படியும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுபோன்ற போலி வலைதளங்களில் பொதுமக்கள் யாரும் தனிப்பட்ட விவரங்களைப் பதிவு செய்ய வேண்டாம். தபால் துறைக்கும் இதுபோன்று பரப்பப்படும் போலி செய்திகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இது போன்ற போலி தகவல்களை தடை செய்ய தபால் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்