கெங்கையம்மன் கோவில் திருவிழா காப்பு கட்டப்பட்டது
குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் சிரசு விழாவையொட்டி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குடியாத்தம்
குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் சிரசு விழாவையொட்டி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காப்பு கட்டுதல் நிகழ்ச்சி
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா வருகிற 15-ந் தேதி நடக்கிறது. முன்னதாக 14-ந் தேதி தேர்த்திருவிழாவும், 17-ந் தேதி பூப்பல்லக்கும் நடைபெறுகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா இரண்டு சிறப்பாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகிறது.
கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக குடியாத்தம் ராபின்சன் குளக்கரை பகுதியில் அலங்கரிக்கப்பட்ட பூங்கரகம் ஊர்வலம் தொடங்கியது. தொடர்ந்து முத்தாலம்மன் கோவில் சென்று அங்கிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் ஊர்வலமாக வந்து அதிகாலை 5 மணி அளவில் கோவிலை அடைந்தது.
வாணவேடிக்கை
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெறுவதால் காப்பு கட்டும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். பூங்கரகம் கோவில் வளாகத்தை சுற்றி வந்து மூலவர் சன்னதியை அடைந்தது. காப்பு கட்டும் நிகழ்ச்சியை முன்னிட்டு விடியவிடிய வாணவேடிக்கை நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, கோவில் ஆய்வாளர் பாரி, ஊர்நாட்டாண்மை ஆர்.ஜி.சம்பத், தர்மகர்த்தா கே.பிச்சாண்டி, திருப்பணிக் குழு தலைவர் ஆர்.ஜி.எஸ். கார்த்திகேயன் உள்ளிட்ட விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, நிர்மலா உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.