மாநில கலை இலக்கிய போட்டியில் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் சாதனை
மாநில கலை இலக்கிய போட்டியில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
திருச்செந்தூர்:
மதுரை யாதவா கல்லூரியில் மாநில அளவிலான கலை இலக்கிய போட்டிகள் நடந்தது. இதில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி ஆங்கில துறையை சேர்ந்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகள் உள்பட 12 கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அனைத்து போட்டிகளிலும் மாணவ, மாணவிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
இதில், ஆதித்தனார் கல்லூரி மாணவ, மாணவிகள் வினாடி-வினா, சிலை உருவ நாடகம், கலை அணிவகுப்பு, உனக்கு பிடித்ததை செய் ஆகிய போட்டிகளில் முதல் பரிசும், நாடகத்தில் 2-ம் பரிசும் பெற்றனர். மேலும் ஒட்டு மொத்த சாம்பியனுக்கான சுழற்கோப்பையும் ஆதித்தனார் கல்லூரி அணிக்கு வழங்கப்பட்டது.
சாதனை படைத்த மாணவ, மாணவிகளை ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன், ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி ஆகியோர் வாழ்த்தினர். ஆங்கில துறை உதவி பேராசிரியை கவிதா மாணவ, மாணவிகளுடன் சென்று ஊக்குவித்தார்.