ஊட்டியில் பட்டாசு வெடிக்க தடை விதித்ததால் போலீசாருடன் அ.தி.மு.க.வினர் வாக்குவாதம்

ஊட்டியில் பட்டாசு வெடிக்க தடை விதித்ததால் போலீசாருடன் அதிமுகவினர் வாக்குவாதம்

Update: 2022-05-01 13:18 GMT
ஊட்டி

மே தினத்தை முன்னிட்டு ஊட்டி பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. சாந்திராமு முன்னிலை வகித்தார். அப்போது திடீரென அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் பட்டாசு பஸ்நிலையம் அருகே வெடிக்கக்கூடாது என்று தடை விதித்தனர். ஆனாலும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடிக்க முயன்றனர். இதனால் போலீசார் அவர்களை தடுத்தனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதோடு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன்காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது. 

மேலும் செய்திகள்