சிங்கப்பெருமாள் கோவிலில் பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் கல்லூரி மாணவர் தற்கொலை

சிங்கப்பெருமாள் கோவிலில் பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-01 04:20 GMT
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவில் பாரதியார் தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 19).

இவர் செங்கல்பட்டு அருகே உள்ள ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவர் பெற்றோரிடம் மோட்டார் சைக்கிள் வாங்கித்தரும்படி கேட்டுள்ளார்.

தற்போதைய குடும்ப சூழ்நிலை பெற்றோர்கள் எடுத்து கூறியுள்ளனர் இதனால் மனமுடைந்த சதீஷ் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்